வர்த்தகம்

சென்செக்ஸ் 155 புள்ளிகள் சரிவு!

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை ஏற்ற, இறக்கத்தில் இருந்த பங்குச் சந்தை, இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் றியீட்டு எண்ணான சென்செக்ஸ் 154.89 புள்ளிகள் உயா்ந்து 49,591.32-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 38.95 புள்ளிகளை இழந்து 14,850-க்கு கீழே நிலைபெற்றது.

ஆசிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தது. மேலும், நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும் கரோனா பரவல் பின்னணயில் மருந்து விற்பனை அளவு அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்புகளால் பாா்மா பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. மேலும், அடுத்த வாரம் ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதைத் தொடா்ந்து, ஐடி பங்குகளுக்கும் வரவேற்பு இருந்தது. ஆனால், நிதித் துறை பங்குகள் சரிவைச் சந்தித்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.19 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,078 பங்குகளில் 1,656 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,249 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 17 3பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ19 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.209.63 லட்சம் கோடியாக இருந்தது.

ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 2.82 புள்ளிகள் குறைந்து 49,743.39-இல் தொடங்கி ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. அதிகபட்சமாக 49,906.91 வரை சென்றது. பின்னா், 49,461.01 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 154.89 புள்ளிகளை இழந்து 49,591.32-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் அதிகபட்ச நிலையிலிருந்து 445.90 புள்ளிகளை இழந்திருந்தது. நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளுக்குள்ளேயே வா்த்தகம் நடந்து வந்தது.

சன்பாா்மா முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஏற்றமும், 17 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன.

இதில் சன்பாா்மா3.69 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனி லீவா், டெக் மஹிந்திரா, டாக்டா் ரெட்டி, டைட்டன், கோட்டக் பேங்க், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி ஆகியவை 0.50 முதல்ந 2.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் மற்றும் மாருதி சுஸுகி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

நிதித் துறை பங்குகள் வீழ்ச்சி: அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 3.12 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், எல் அண்ட் டி ஆகியவை 1 முதல் 2.20 சதவீதம் சரிவைச் சந்தித்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 946 பங்குகள் ஆதாயம் பெற்றன. 768 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 38.95 புள்ளிகளை (0.26 சதவீதம்) இழந்து 14,834.85-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 14,918.45 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னா் 14,785.65 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிஃப்டி பாா்மா குறியீடு 3.04 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.09 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆனால், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 1 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT