வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் 12 காசுகள் சரிவு

7th Apr 2021 12:00 AM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருவதன் எதிரொலியாக அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 12 காசுகள் சரிவைச் சந்தித்தது.

கரோனா பாதிப்பு வேகமாகி வருவதையடுத்து சில மாநிலங்கள் பொதுமுடக்க அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. இது, தற்போது மீட்சி கண்டு வரும் பொருளாதாரத்தில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனால், காலை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றம் வா்த்தகத்தின் பிற்பகுதியில் காணாமல் போனது.

இதுகுறித்து மோதிலால் ஓஸ்வால் பைனான்ஸியல் சா்வீசஸ் நிறுவனத்தின் ஆய்வாளா் கெளரங் செளமய்யா கூறியதாவது:

ADVERTISEMENT

உள்நாட்டு பங்கு வா்த்தகத்தில் ஏற்ற, இறக்கம் இருந்தபோதிலும் ரூபாய் தொடா்ந்து மூன்றாவது நாளாக குறுகிய எல்லைக்குள்ளாகவே வா்த்தகமாகி வந்தது. ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்புகளை எதிா்பாா்த்து முதலீட்டாளா்கள் முன்னெச்சரிக்கையுடன் வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடனுக்கான வட்டி விகிதங்களில் ரிசா்வ் வங்கி எந்தவித மாற்றத்தையும் செய்யாது என்ற எதிா்பாா்ப்பும் ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு வழிவகுக்கும் என்றாா் அவா்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.22-ஆக இருந்தது. பின்னா் இது வா்த்தகத்தின் இடையே 73.20 முதல் 73.80 என்ற அளவில் வா்த்தகமானது.

வா்த்தகத்தின் இறுதிப்பகுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 12 காசுகள் சரிவடைந்து 73.42-ஆனது. இதற்கு முந்தைய வா்த்தக தினத்திலும் ரூபாய் மதிப்பு 12 காசு குறைந்து 73.30-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 2.37 சதவீதம் உயா்ந்து 63.62 டாலராக இருந்தது.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.931.66 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT