வர்த்தகம்

பங்குச்சந்தையில் அந்நிய நிறுவன முதலீடு ரூ.2,74,034 கோடி

7th Apr 2021 04:36 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிறுவன முதலீடு 2020-21 நிதியாண்டில் ரூ. 2,74,034 கோடி அளவுக்கு வந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 கடந்த 2020 -இல் கரோனா தொற்றால் சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், இந்தியாவில் அந்நிய நிறுவன முதலீடு அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் கூறுகையில், "இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உறுதியான நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது' என தெரிவித்துள்ளது.
 அந்நிய நிறுவன முதலீடு என்பது ஓய்வூதியம் முதல் சிறு சிறு முதலீட்டாளர்கள் வரை செய்யும் முதலீடுகளை பெறும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்வது எஃப்.பி.ஐ. (ஊர்ழ்ங்ண்ஞ்ய் டர்ழ்ற்ச்ர்ப்ண்ர் ஐய்ஸ்ங்ள்ற்ம்ங்ய்ற்ள்) என்பதாகும். கடந்த நிதியாண்டில் ரூ. 2,74, 034 கோடி வரை அந்நிய நிறுவன முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது. எஃப்.பி.ஐ.க்குள்ள 24 சதவீத வரம்பை நீக்கியது, இந்த முதலீட்டிற்கான விண்ணப்பங்களுக்கு இணையதளத்தை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டதும் இதற்குக் காரணம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT