வர்த்தகம்

மார்ச் மாதத்தில் 1.67 லட்சம் மாருதி சுசூகி கார்கள் விற்பனை

1st Apr 2021 01:27 PM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் 1,67,014 கார்கள் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு, இதே மார்ச் மாதம் வெறும் 83,792 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. 

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மாருது சுசூகியின் கார் உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், கடந்த 2020 மார்ச் மாதத்தில், உள்நாட்டு விற்பனை 48 சதவீதம் அளவுக்கு சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மார்ச் மாதத்தில் ஆகியிருக்கும் உள்நாட்டு வாகன விற்பனை, 2019-ஆம் ஆண்டு அளவைத்தான் எட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : car suzuki
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT