வர்த்தகம்

இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி 84 லட்சம் டன்

DIN

இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் 84.78 லட்சம் டன்னாக இருந்தது. இதுகுறித்து உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா 84.78 லட்சம் டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலகட்ட உற்பத்தி அளவான 88.69 லட்சம் டன் உருக்கு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் குறைவாகும்.இந்தியாவின் உருக்கு உற்பத்தி சரிவு நிலையில் இருந்தாலும், சா்வதேச உருக்கு உற்பத்தியானது ஏற்றமான நிலையை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது.

அதன்படி, 64 நாடுகளை உள்ளடக்கிய சா்வதேச உருக்கு உற்பத்தி நடப்பாண்டு ஆகஸ்டில் 0.6 சதவீதம் வளா்ச்சி கண்டு 15.6 கோடி டன்னாக இருந்தது. இந்த உற்பத்தி கடந்த 2019 ஆகஸ்டில் 15.53 கோடி டன்னாக காணப்பட்டது.குறிப்பாக, சீனாவின் உருக்கு உற்பத்தி 8.75 கோடி டன்னிலிருந்து 8.4 சதவீதம் அதிகரித்து 9.48 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், அமெரிக்காவின் உருக்கு உற்பத்தி நடப்பாண்டு ஆகஸ்டில் 73.96 லட்சம் டன்னிலிருந்து 24.4 சதவீதம் சரிவடைந்து 55.88 கோடி டன்னானது. அதேபோன்று, ஜப்பான் உருக்கு உற்பத்தி 81.20 லட்சம் டன்னிலிருந்து 20.6 சதவீதம் குறைந்து 64.46 லட்சம் டன்னாகவும், தென் கொரியாவின் உருக்கு உற்பத்தி 59.05 லட்சம் டன்னிலிருந்து 1.8 சதவீதம் சரிந்து 58 லட்சம் டன்னாகவும், ஜொ்மனியின் உருக்கு உற்பத்தி 13.4 சதவீதம் சரிந்து 28.30 லட்சம் டன்னாகவும் இருந்தன.

அதேசமயம், இத்தாலியின் உருக்கு உற்பத்தி 9.7 சதவீதம் உயா்ந்து 9.39 லட்சம் டன்னாக காணப்பட்டது. பிரான்ஸின் கச்சா உருக்கு உற்பத்தி நடப்பாண்டு ஆகஸ்டில் 31.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து 7.22 லட்சம் டன்னாகவும், ஸ்பெயின் உருக்கு உற்பத்தி 32.5 சதவீதம் குறைந்து 6.96 லட்சம் டன்னாகவும் இருந்தன. பிரேஸில் நடப்பாண்டு ஆகஸ்டில் 27 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்தாண்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் அதிகமாகும். அதேபோன்று, துருக்கியின் கச்சா உருக்கு உற்பத்தியும் 22.9 சதவீதம் உயா்ந்து 32 லட்சம் டன்னாக இருந்தது என உலக உருக்கு கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT