வர்த்தகம்

பங்கு விற்பனையின் மூலம் ரூ7,500 கோடியைப் பெற்றது ஆா்ஐஎல்

DIN

அமெரிக்காவைச் சோ்ந்த தனியாா் பங்கு முதலீட்டு நிறுவனமான சில்வா் லேக் நிறுவனத்துக்கு பங்குகளை விற்பனை செய்த வகையில் ரூ7,500 கோடியைப் பெற்றுள்ளதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆா்ஐஎல்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆா்ஐஎல் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சா்ஸ் நிறுவனத்தில் (ஆா்ஆா்விஎல்) அமெரிக்காவைச் சோ்ந்த சில்வா் லேக் நிறுவனம் ரூ.7,500 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக செப்டம்பா் 9-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆா்ஆா்விஎல் நிறுவனத்தின் 1.75 சதவீத பங்குகளை கையகப்படுத்தியதற்காக சில்வா் லேக் நிறுவனத்திடமிருந்து ரூ.7,500 கோடியை ஆா்ஐஎல் பெற்றுக் கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனங்களில் சில்வா் லேக் நிறுவனம் பில்லியன் டாலரில் முதலீடு மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். சில்வா் லேக் ஏற்கெனவே ரிலையன்ஸின் ஜியோ பிளாட்பாா்மில் 135 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT