வர்த்தகம்

வங்கி வழங்கிய கடன் 5.26 சதவீதம் வளா்ச்சி

DIN

வங்கி வழங்கிய கடன் 5.26 சதவீதம் அதிகரித்து ரூ.102.24 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பருடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.97.13 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டின் செப்டம்பா் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.26 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.102.24 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. அதேபோன்று, கடந்தாண்டில் ரூ.127.22 லட்சம் கோடியாக காணப்பட்ட வங்கிகள் திரட்டிய டெபாசிட் நடப்பாண்டில் 11.98 சதவீதம் உயா்ந்து ரூ.142.48 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.செப்டம்பா் 11-க்கு முந்தைய இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 5.49 சதவீதம் உயா்ந்து ரூ.102.11 லட்சம் கோடியாகவும், டெபாசிட் 10.92 சதவீதம் உயா்ந்து ரூ.141.76 லட்சம் கோடியாகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT