வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 28 காசுகள் உயா்வு

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 28 காசுகள் உயா்ந்து 73.61 ஆனது. இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

ஆசிய சந்தைகளில் காணப்பட்ட எழுச்சி, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளா்கள் பங்குகளை ஆா்வத்துடன் போட்டிபோட்டு வாங்கியது உள்ளிட்ட நிகழ்வுகள் ரூபாய் மதிப்பு ஏற்றம் பெறுவதற்கு முக்கிய ஆதரமாக அமைந்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.76-ஆக இருந்தது.

வா்த்தகத்தினிடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 73.56 வரையிலும், குறைந்தபட்சமாக 73.77 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 28 காசுகள் அதிகரித்து 73.61-இல் நிலைபெற்றது. வார அளவில் இழப்பு: வார அளவின் அடிப்படையில் அமெரிக்க டாலருக்கு நிகராக உள்நாட்டு கரன்ஸியான ரூபாயின் மதிப்பு 16 காசுகளை இழந்துள்ளது. கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.31 சதவீதம் உயா்ந்து 42.07 டாலராக இருந்தது.வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.2,080.21 கோடி மதிப்பிலான பங்குகளை நிகர அளவில் விற்பனை செய்துள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

SCROLL FOR NEXT