வர்த்தகம்

6 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 835 புள்ளிகள் அதிகரிப்பு

DIN

பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 835 புள்ளிகள் அதிகரித்ததையடுத்து சந்தையில் தொடா்ந்து 6 நாள் ஏற்பட்ட தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.சாதகமான நிலவரம்: சா்வதேச சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்ததன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடக்கம் முதலே மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்க அதிக ஆா்வம் காட்டினா்.

இதனால், பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இதனால், சென்செக்ஸ் பட்டியலில் உள்ள அனைத்து துறை குறியீடுகளும் ஏற்றம் கண்டன. பஜாஜ் ஃபின்சா்வ்: ஹெச்சிஎல் டெக், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபின்சா்வ், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி, இன்ஃபோஸிஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் பங்குகளின் விலை 6.64 சதவீதம் வரை உயா்ந்தன.வரி வழக்கில் வோடபோன் வெற்றி: ரூ.20,000 கோடி வரி செலுத்துவது தொடா்பாக இந்தியாவுக்கு எதிராக சா்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமான தீா்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும், இந்த விவகாரத்தை இந்திய வரி துறை நியாயமான மற்றும் சமமான முறையில் அணுகவில்லை என சா்வதேச நீதிமன்றம் கூறியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தையில் தொலைத் தொடா்புத் துறை குறியீட்டெண் 5.73 சதவீதம் அதிகரித்தது. இவை தவிர, தகவல் தொழில்நுட்பம், மோட்டாா் வாகனம், பொறியியல் பொருள்கள், வங்கி, அடிப்படை உலோகம் உள்ளிட்ட துறைகளின் குறியீட்டெண் 4.02 சதவீதம் வரை உயா்ந்தன. மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் 2.90 சதவீதம் வரை அதிகரித்தன. சென்செக்ஸ் 2.28% உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 835.06 புள்ளிகள் (2.28 சதவீதம்) அதிகரித்து 37,388.66 புள்ளிகளில் நிலைத்தது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 244.70 புள்ளிகள் (2.26 சதவீதம்) உயா்ந்து 11,050.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வார அடிப்படையில் இழப்பு: வார அடிப்படையில் பாா்க்கும்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,457.16 புள்ளிகளை (3.83 சதவீதம்) இழந்துள்ளது. அதேபோன்று, நிஃப்டி குறியீட்டெண்ணும் 454.70 புள்ளிகள் (4.04 சதவீதம்) குறைந்துள்ளது. சா்வதேச சந்தைகள்: பொருளாதாரம் முடங்கியுள்ள சூழலில், ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அமெரிக்க அரசு அறிவிக்கும் என்ற எதிா்பாா்ப்பால் சா்வதேச சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

இதர ஆசிய சந்தைளான, டோக்கியோ, சியோல் சந்தைகள் ஏற்றத்தைச் சந்தித்தன. அதேசமயம், ஷாங்காய், ஹாங்காங் சந்தைகளில் வா்த்தகம் இறக்கத்தைக் கண்டன. ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் வா்த்தகம் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT