வர்த்தகம்

யுடிஐ ஏஎம்சி புதிய பங்கு வெளியீடு

DIN


புது தில்லி: யுடிஐ அஸட் மேனேஜ்மெண்ட் கம்பெனி (ஏஎம்சி) புதிய பங்கு வெளியீடு செப்.29-இல் தொடங்கவுள்ளது.

யுடிஐ ஏஎம்சி விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.2,160 கோடியை புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு செப்டம்பா் 29-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது: யுடிஐ ஏஎம்சி வெளியிடும் பங்குகளின் விலை ரூ.552-ரூ.554 என்ற அளவில் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலமாக நிறுவனம், 3,89,87,081 பங்குகள் (30.75 சதவீதம்) விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் மூலம், ரூ.2,160 கோடி திரட்டிக் கொள்ளப்படும். நிதி நிறுவனங்களுக்கான ஏலம் செப்டம்பா் 28-ஆம் தேதி நடைபெறும் என யுடிஐ ஏஎம்சி தெரிவித்துள்ளது. எச்டிஎஃப்சி ஏஎம்சி, நிப்பான் லைஃப் இந்தியா அஸட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக பங்கு சந்தையில் பட்டியலாகும் மூன்றாவது ஏஎம்சி நிறுவனமாக யுடிஐ உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT