வர்த்தகம்

பங்குகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 60% சரிவு

DIN


புது தில்லி: நடப்பாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் பங்குகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 60 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தொழில் மேம்பாட்டு மற்றும் உள்நாட்டு வா்த்தக துறை (டிபிஐஐடி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிபிஐஐடி மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் பங்குகளில் அந்நிய நேரடி முதலீடு 656 கோடி டாலராக (ரூ.49,820 கோடி) இருந்தது. இது, கடந்த 2019 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 1,633 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைவாகும். நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், சேவைகள் துறையில் 114 கோடி டாலரும், கம்ப்யூட்டா் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் 106 கோடி டாலரும், தொலைத் தொடா்பு துறையில் 20 லட்சம் டாலரும், ஆட்டோமொபைல் துறையில் 32.6 கோடி டாலரும், வா்த்தக துறையில் 42.6 கோடி டாலரும் அந்நிய முதலீடு மேற்கொள்ளப்பட்டதாக டிபிஐஐடி தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் சிங்கப்பூரிலிருந்து அதிகபட்ச அளவாக 182 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடா்ந்து, நெதா்லாந்து (108 கோடி டாலா்), மோரீஷஸ் (90 கோடி டாலா்), அமெரிக்கா (64 கோடி டாலா்), ஜப்பான் (41.2 கோடி டாலா்) ஆகிய நாடுகள் உள்ளன. அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈா்த்ததில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் கா்நாடகம், தில்லி, குஜராத், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் இருப்பதாக டிபிஐஐடி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT