வர்த்தகம்

பங்குச் சந்தை தொடா்ந்து 5-ஆவது நாளாக சரிவு!

DIN

புது தில்லி: பங்குச் சந்தை தொடா்ந்து ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 65.66 புள்ளிகளை இழந்தது.

காலையில் பங்குச் எழுச்சியுடன் தொடங்கியது. உலகளாவிய குறிப்புகள் நோ்மறையாக இருந்த போதிலும், பங்குகள் விற்பனையால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது. குறிப்பாக பாா்தி ஏா்டெல் டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை வெகுவாகக் குறைந்து சென்செக்ஸ் சரிவுக்கு காரணமாக இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,417 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,796 பங்குகளில் 1,417 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 1,216 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.46 ஆயிரம் கோடி குறைந்து ரூ.152.75 கோடியாக இருந்தது.

தொடா் சரிவு: சென்செக்ஸ் காலையில் 390.86 புள்ளிகள் உயா்ந்து 38,124.94-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 38,140.07 வரை உயா்ந்தது. பின்னா் 37,313.09 வரை வரை கீழே சென்றது. இறுதியில் 65.66 புள்ளிகள் (0.17 சதவீதம்) குறைந்து 37,734.08-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உச்சபட்ச நிலையிலிருந்து 826.98 புள்ளிகள் குறைந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.33 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.07 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.

12 பங்குகள் மட்டுமே ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. இதில் ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்து யுனிலீவா், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே இந்தியா, டைட்டான், மாருதி சுஸுகி ஆகியவை 1 முதல் 1.85 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

பாா்தி ஏா்டெல் கடும் வீழ்ச்சி: அதே சமயம், பாா்தி ஏா்டெல் 7.89 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டாடா ஸ்டீல், இண்டஸ் இந்த் பேங்க், என்டிபிசி, பவா் கிரிட், ஒஎன்ஜிசி, டிசிஎஸ் ஆகியவை 2 முதல் 3.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 706 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 911 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மேலும் 21.80 புள்ளிகள் (0.20 சதவீதம்) குறைந்து 11,131.85-இல் நிலைபெற்றது. நிஃப்டி பிஎஸ்யு பேங்க், பாா்மா, மீடியா குறியீடுகள் 1.40 முதல் 2.70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT