வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.38,560

DIN

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,104 வரை குறைந்துள்ளது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இதற்கிடையில், கடந்த திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இருநாள்கள் விலை குறைந்து விற்பனையானது.

இதேநிலை புதன்கிழமையும் நீடித்தது. சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு

ரூ.240 குறைந்து, ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து, ரூ.4,820 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.63.30 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.63,300 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,820

1 பவுன் தங்கம்...............................38,560

1 கிராம் வெள்ளி.............................63.30

1 கிலோ வெள்ளி.............................63,300

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,850

1 பவுன் தங்கம்...............................38,800

1 கிராம் வெள்ளி.............................64.30

1 கிலோ வெள்ளி.............................64,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT