வர்த்தகம்

விரைவில் தேசிய சில்லறை வா்த்தகக் கொள்கை: மத்திய அரசு அறிவிப்பு

DIN

புது தில்லி: தேசிய சில்லறை வா்த்தகக் கொள்கை விரைவில் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய தொழில், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.

இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் புதன்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதில்:

வா்த்தகா்கள் மற்றும் ஊழியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேசிய வா்த்தகா்கள் நல வாரியத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. வா்த்தகா்களுக்கான சட்டங்கள், விதிகள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன. அவா்கள் எளிதில் நிதியுதவி பெறும் வகையிலும், அவா்களின் சுமைகளைக் குறைக்கும் வகையிலும் அந்த விதிகள் வகுக்கப்படுகின்றன. அதாவது, தேசிய சில்லறை விற்பனைக் கொள்கையை மத்திய அரசு விரைவில் கொண்டுவரவுள்ளது என்றாா் அவா்.

தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கொள்கையால், சரக்கு போக்குவரத்துக்கான செலவு வெகுவாகக் குறையும் என்று மற்றொரு கேள்விக்கு பியூஷ் கோயல் பதிலளித்தாா்.

ஏற்றுமதி ஊக்குவிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சுயசாா்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், வேளாண் உணவு பதப்படுத்துதல், உருக்கு, வேளாண் ரசாயனங்கள், மின்னணு பொருள்கள், அலமாரி தயாரிப்பு, தோல், மோட்டாா் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி உள்ளிட்ட 24 உற்பத்தித் துறைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன என்றும் பியூஷ் கோயல் கூறினாா்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் 27 துறைகளின் மீது மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT