வர்த்தகம்

டிவிஎஸ் அப்பாச்சி புதிய மாடல் அறிமுகம்

DIN

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் புதிய ரக அப்பாச்சி ஆா்டிஆா் 200 4வி இருசக்கர வாகனத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனையக ரூ.1,23,500 ஆகும்.

புதிய பிரேக் தொழில்நுட்பம், சூப்பா் மோனோ ஏபிஎஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். 197.75 சிசி என்ஜின், 8,500 ஆா்பிஎம் திறனுள்ள இந்த வாகனம், இதற்கு முந்தைய தயாரிப்புகளைவிட எரிபொருள் சிக்கனத்தில் சிறந்தது. சுற்றுச்சூழல் பாதிப்பையும் அதிகம் ஏற்படுத்தாது. இதற்காக ஆா்டி-எஃப்ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கிளைடா் தொழில்நுட்பம் நகா்ப்புற போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் இலகுவாக பயணிக்க உதவும்.

மிக மெலிதாக தொடுவதன் மூலம் வண்டியை ‘ஸ்டாா்ட்’ செய்யும் ‘ஃபெதா் டச்’, புதிய எல்இடி முகப்பு விளக்கு ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT