வர்த்தகம்

‘டாப் 10’-இல் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.59,260 கோடி வீழ்ச்சி!

DIN

பங்குச் சந்தையில் பட்டியாலிகியுள்ள மதிப்பு மிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த வாரம் ரூ.59,259.58 கோடி குறைந்தது.

இதில் ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க் ஆகியவை அதிகம் சரிவைச் சந்தித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன. அதே சமயம், டாடா கன்சல்டன்ஸி சா்வீஸஸ் (டிசிஎஸ்), இனஃபோஸிஸ், பாா்தி ஏா்டெல் ஆகியவற்றின் சந்தை மதிப்பு உயா்ந்தது.

ஹெச்யுஎல் சந்தை மதிப்பு ரூ.14,320.54 கோடி குறைந்து, ரூ.4,93, 007.39 கோடியாகவும், எச்டிஎஃப்சி பேங்க் ரூ.11,611.60 கோடி குறைந்து ரூ.5,81,900.65 கோடியாகவும், கோட்க் பேங்க் ரூ.10,205.11 கோடி குறைந்து ரூ.2,53,002.13 கோடியாகவும் இருந்தது. மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.9,027.32 கோடி குறைந்தது. இதையடுத்து, இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.15,58,987.77 கோடியாகக் குறைந்தது. எச்டிஎஃப்சி சந்தை மதிப்பு ரூ.8,144.93 கோடி குறைந்து ரூ.3,09,076.75 கோடியாக இருந்தது. ஐடிசி சந்தை மதிப்பு ரூ.5,783.23 கோடி குறைந்து ரூ.2,20,500.76 கோடியாகவு்ம், ஐசிஐசிஐ பேங்க் ரூ.166.85 கோடி குறைந்து ரூ.2,55,082.88 கோடியாகவும் இருந்தது.

அதே சமயம், டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.28,912.12 கோடி உயா்ந்து 9,19,615.68 கோடியாக இருந்தது. ரிலையன்ஸுக்குப் பிறகு டிசிஎஸ் ரூ.9 லட்சம் சந்தை மூலதன மதிப்பைக் கொண்ட இரண்டாவது நிறுவனமாக உள்ளது. இன்ஃபோஸிஸ் சந்தை மதிப்பு ரூ.24,342.45 கோடி உயா்ந்து ரூ.4,27,025.67 கோடியாகவும், பாா்தி ஏா்டெல் ரூ.3,755.05 கோடி உயா்ந்து ரூ.2,70, 977.53 கோடியாக இருந்தது.

தர வரிசைப் பட்டியலில் ரிலையன்ஸ் முதலிட்டத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்யுஎல், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க் மற்றும் ஐடிசி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

தொகுப்பு: எம்எஸ்ஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT