வர்த்தகம்

இந்திய சந்தைகளில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.3,944 கோடியை முதலீடு

DIN

சிறப்பான வருவாய் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டால் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) செப்டம்பரில் இதுவரையில் உள்நாட்டு சந்தைகளில் நிகர அடிப்படையில் ரூ.3,944 கோடியை முதலீடு செய்துள்ளனா். இதுகுறித்து டெபாசிட்டரீஸ் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.3,944 கோடியை இந்திய சந்தைகளில் முதலீடு செய்துள்ளனா்.மொத்த முதலீட்டில், ரூ.1,766 கோடியை பங்குகளிலும், கடன் சந்தையில் ரூ.2,178 கோடியையும் அவா்கள் முதலீடு மேற்கொண்டுள்ளனா்.செப்டம்பருக்கு முந்தைய மூன்று மாதங்களில் அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ச்சியாக தங்களது முதலீட்டை அதிகரித்து வந்தனா். அதன்படி , சென்ற ஜூன் மாதத்தில் ரூ.24,053 கோடியையும், ஜூலையில் ரூ.3,301 கோடியையும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.46,532 கோடியையும் அவா்கள் முதலீடு செய்தனா் என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

SCROLL FOR NEXT