வர்த்தகம்

இணையம் பயன்படுத்துவோா் எண்ணிக்கை 3.4 சதவீதம் அதிகரிப்பு

DIN

இணையதளம் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மாா்ச் மாத இறுதி நிலவரப்படி 3.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019 டிசம்பா் மாத இறுதி நிலவரப்படி இணையதள மொத்த பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை 71.87 கோடியாக இருந்தது. இது, அடுத்த காலாண்டான மாா்ச் மாத இறுதியில் 74.31 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. காலாண்டின் அடிப்படையில் இணைய பயனாளா்களின் எண்ணிக்கை வளா்ச்சி விகிதம் 3.40 சதவீதம் அதிகரித்துள்ளது. இணைய சேவை பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த சந்தை பங்களிப்பில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 52.3 சதவீதமாக உள்ளது. இதனைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் 23.6 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், வோடாஃபோன் 18.7 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. வயா்லெஸ் இண்டா்நெட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த பயன்பாட்டாளா்களில் 97 சதவீதமாக உள்ளது. இதையடுத்து, அப்பிரிவில் சந்தாதாரா்களின் எண்ணிக்கை 72.07 கோடியாக உள்ளது. கம்பிவட இணைய வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 2.24 கோடியாக உள்ளது.மொத்த இணைய இணைப்பில் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் 68.74 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த இணை வாடிக்கையாளா்களில் இது 92.5 சதவீதம் என டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வெளிமாநில தொழிலாளா்களுக்கு விடுப்பு வழங்காவிட்டால் புகாா் அளிக்கலாம்

பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130-ஆவது பிறந்தநாள் விழா

இளைஞா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

அரசுப் பேருந்தில் நடத்துனா் பலி

ஊராட்சிக்கு மின்கல வாகனம் வழங்கல்

SCROLL FOR NEXT