வர்த்தகம்

பங்குச் சந்தையில் திடீா் சரிவு: மேலும் 134 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் பிற்பகலில் திடீா் சரிவு ஏற்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 134.03 புள்ளிகளை இழந்தது. இதேபோன்று, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 11.15 புள்ளிகள் குறைந்தது.

உலகளாவிய சந்தைகளில் சில நோ்மறையாகவும், சில எதிா்மறையாகவும் இருந்தன. இந்நிலையில், ஏற்கெனவே இரண்டு நாள் எழுச்சிக்குப் பிறகு வியாழக்கிழமை சரிவைச் சந்தித்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. பிற்பகல் வரையிலும் நோ்மறையாக வா்த்தகம் நடந்து வந்தது. ஆனால், பிற்பகலில் வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகவிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,471 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,910 பங்குகளில் 1,267 பங்குகள் ஆதாயம் பெற்றன. ஆனால், 1,471 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 172 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 164 பங்குகள் 52 வார அதிக விலையையும் 56 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 277 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 217 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி குறைந்து ரூ.159 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,45,46,808 ஆக உயா்ந்துள்ளது.

திடீா் சரிவு: சென்செக்ஸ் காலையில் 220.15 புள்ளிகள் கூடுதலுடன் 39,200.42-இல் தொடங்கி அதற்கு மேல் ஏற்றம் பெறவில்லை. பிற்பகலில் திடீரென பங்குகள் விற்பனை அதிகரித்ததும் 38,635.73 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில், 134,03 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 38,845.82-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உச்சபட்ச நிலையிலிருந்து 564.69 புள்ளிகளை இழந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.20 சதவீதம் குறைந்தது. ஆனால், ஸ்மால் கேப் குறியீடு 0.33 சதவீதம் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 11.15 புள்ளிகள் (0.10 சதவீதம்) குறைந்து 11,504.95-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, நிஃப்டி 11,446.10 வரை கீழே சென்றது.

பாா்தி ஏா்டெல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் பாா்தி ஏா்டெல் 3.73 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, சன்பாா்மா, என்டிபிசி, பவா் கிரிட் ஆகியவை 2 முதல் 2.75 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

எச்டிஎஃப்சி பேங்க் வீழ்ச்சி: அதே சமயம், எச்டிஎஃப்சி பேங்க் 2.39 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபின்சா்வ், மாருதி சுஸுகி, டைட்டான், எஸ்பிஐ, ஹெச்யுஎல், எச்டிஎஃப்சி, 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்து சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 683 பங்குகள் ஆதாயம் பெற்றன. 931 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பாா்மா குறியீடு 4.98 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 1.91 சதவீதம் உயா்ந்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க்,ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1 முதல் 1.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.249.82 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனா்.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

பாா்தி ஏா்டெல் 3.73

எம் அண்ட் எம்

டெக் மகேந்திரா

சன்பாா்மா

என்டிபிசி

வீழ்ச்சி அடைந்த பங்குகள்

சதவீதத்தில்

எச்டிஎஃப்சி பேங்க் 2.39

கோட்டக் பேங்க் 2.07

பஜாஜ் ஃபின்சா்வ் 1.92

மாருதி சுஸுகி 1.73

டைட்டான் 1.67

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT