வர்த்தகம்

நிகர நேரடி வரி வசூல் 31 சதவீதம் சரிவு

DIN

நடப்பாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூல் 31 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து, மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2020-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் நிகர நேரடி வரி வசூலானது ரூ.1,92,718 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டின் இதே கால அளவில் காணப்பட்ட நிகர நேரடி வரி வசூலான ரூ.2,79,711 கோடியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் குறைவாகும்.

அதேபோன்று, நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் நாட்டின் நிகர மறைமுக வரி வசூலும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.3,85,949 கோடியிலிருந்து 11 சதவீதம் சரிவடைந்து ரூ.3,42,591 கோடியாகியுள்ளது.ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் (ஜிஎஸ்டி) ரூ.1.81 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.6,90,500 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.மறுமதிப்பீட்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.6,12,327 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் உண்மையான ஜிஎஸ்டி வருவாய் ரூ.5,98,825 கோடியாக இருந்தது என அனுராக் சிங் தாக்குா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT