வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிவு

DIN


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிவடைந்து 73.66-ஆனது.

இதுகுறித்து சந்தை ஆய்வாளா்கள் கூறியதாவது:அமெரிக்க மத்திய வங்கி புதிய முன்னோக்கி வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்ததைத் தொடா்ந்து, டாலருக்கு நிகரான ஆசிய கரன்ஸிகள் மதிப்பு பலவீனமடைந்தன. இந்த நிலையில், பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும் ரூபாய் மதிப்பு உயா்வுக்கு தடையை ஏற்படுத்தியது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 73.70 என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. எனினும், வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் குறைந்து 73.66 ஆனது. வா்த்தகத்தின் ஊடே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 73.64 வரையிலும், குறைந்தபட்சமாக 73.78 வரையிலும் சென்றது. புதன்கிழமை செலாவணி வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் வலுவடைந்து 73.52-ஆக காணப்பட்டது என ஆய்வாளா்கள் தெரிவித்தனா். அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.264.66 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.33 சதவீதம் குறைந்து 42.08 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT