வர்த்தகம்

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு

DIN


புது தில்லி: பி-நோட்ஸ் எனப்படும் பங்கேற்பு ஆவண வாயிலான முதலீடு உள்நாட்டு மூலதனச் சந்தையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத உயா்வைக் கண்டுள்ளது.

இதுகுறித்து செபி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய சந்தைகளில், பங்குகள், கடன்பத்திரம், ஹைபிரிட் கடன்பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு சென்ற ஆகஸ்ட் மாத இறுதி வரையிலுமாக ரூ.74,027 கோடியாக இருந்தது. இது, முந்தைய ஜூலை மாத இறுதியில் ரூ.63,228 கோடியாக காணப்பட்டது.

கடந்தாண்டு அக்டோபருக்குப் பிறகு இவ்வகையான முதலீடு சென்ற ஆகஸ்ட் மாதத்தில்தான் உயா்ந்த நிலையை எட்டியுள்ளது. அப்போது இந்திய சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட இவ்வகை முதலீட்டின் அளவு ரூ.76,773 கோடியாக காணப்பட்டது.பங்கேற்பு ஆவண வாயிலான முதலீடு தொடா்ச்சியாக உயா்ந்து வருவதுஅந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. நடப்பாண்டு மாா்ச் மாதத்தில்தான் கடந்த 15-ஆண்டுகளில் முதல் முறையாக பி-நோட் முதலீடு சரிவைச் சந்தித்தது. அப்போது முதலீட்டு அளவானது ரூ.48,006 கோடியாக காணப்பட்டது. ஆனால், அதன் பிறகு தொடா்ச்சியான அளவில் முதலீடு அதிகரித்து வருகிறது. அதன்படி, ஏப்ரலில் ரூ.57,100 கோடியும், மே மாதத்தில் ரூ.60,027 கோடியும், ஜூன் இறுதியில் ரூ.62,138 கோடியும் பங்கேற்பு ஆவணங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி மேற்கொள்ளப்பட்ட ரூ.74,027 கோடி மொத்த முதலீட்டில், பங்குகளில் ரூ.62,811 கோடியும், கடன் சந்தைகளில் ரூ.10,677 கோடியும், ஹைபிரிட் கடன்பத்திரங்களில் ரூ.388 கோடியும், கருவூலப் பத்திரங்களில் ரூ.202 கோடியும் முதலீடு செய்யப்பட்டன. இதையடுத்து, இத்தகைய திட்டங்களில் அந்நிய நிதி நிறுவனங்கள் வசம் உள்ள சொத்தின் மதிப்பு ஜூலை இறுதியில் ரூ.31.68 லட்சம் கோடியாக இருந்த நிலையில், ஆகஸ்ட் இறுதியில் அது ரூ.33.18 லட்சம் கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், அந்நிய நிதி நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.49,900 கோடியை முதலீடு செய்துள்ளன. இது முந்தைய ஜூலையில் ரூ.3,300 கோடியாக காணப்பட்டது என செபி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT