வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.39,576

DIN

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.39,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.104 குறைந்து, ரூ.39,576-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 குறைந்து, ரூ.4,947-ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து,

ரூ.71 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.71,000 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,947

1 பவுன் தங்கம்...............................39,576

1 கிராம் வெள்ளி.............................71.00

1 கிலோ வெள்ளி.............................71,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,960

1 பவுன் தங்கம்...............................39,680

1 கிராம் வெள்ளி.............................71.50

1 கிலோ வெள்ளி.............................71,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT