வர்த்தகம்

ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் நிறுவனத்தின் லாபம் 62% சரிவு

17th Sep 2020 01:30 AM

ADVERTISEMENT

புது தில்லி: கடந்த ஜூன் மாதம் வரையிலான காலாண்டில், ஸ்டெர்லிங் வில்சன் சோலார் நிறுவனத்தின் நிகர லாபம் 62 சதவீதம் குறைந்துள்ளது.
சூரிய மின்னுற்பத்தி சாதனங்களை தயாரித்து வரும் அந்த நிறுவனம்,வரவு செலவு கணக்கை பங்குச் சந்தையிடம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: வருவாய் சரிவு காரணமாக, கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலாண்டில் நிறுவனம் ரூ.17.22 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 62 சதவீதம் சரிவாகும். கடந்த ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.46.01 கோடியாக இருந்தது.
இதேபோல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலாண்டின் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,309.34 கோடியாக இருந்தது. இது,நிகழ் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,099.38 கோடியாகக் குறைந்துவிட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT