வர்த்தகம்

ரூ.441 கோடி நிதி திரட்டியது ஆக்கோ

17th Sep 2020 01:26 AM

ADVERTISEMENT

புது தில்லி: காப்பீடு நிறுவனமான ஆக்கோ (ஏசிகேஓ) தனது முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ. 441.8 கோடி நிதி திரட்டி உள்ளது. இந்த நிதியை ஆக்கோ நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், புதிய திட்டங்களுக்காகவும் செலவிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆக்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எங்கள் முதலீட்டு நிறுவனங்களான அமேசான், ஆர்பிஎஸ் வென்டர்ஸ் மற்றும் இன்டாக்ட் வென்டர்ஸ் நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து நிதி பெறப்பட்டுள்ளது.
ஆக்கோவில் தற்போது 6 கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அமேசான், ஓலா, ரெட்பஸ், சோமெடோ, அர்பன்கிளாப் உள்ளிட்ட 20 நிறுவனங்களின் பொருள்களுக்கு ஆக்கோ காப்பீடு வழங்கி வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தில்லி கேப்பிடல் அணிக்கு விளம்பரதாரராக ஆக்கோ அறிவித்துள்ளது. தொடக்கத்தில் இருந்து ஆக்கோவில் பங்குதாரராக முனிச் ரி நிறுவனம் உள்ளது. சர்வதேச அளவில் எங்கள் நிறுவனத்துக்கு கிடைத்துள்ள முதலீடுகள் எங்கள் நிறுவனத்தின் வர்த்தகம் மீது முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காண்பிக்கிறது' என்று ஆக்கோ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வருண் துவா தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT