வர்த்தகம்

"கேம்ஸ்' பொதுப் பங்கு வெளியீடு: 21-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

17th Sep 2020 01:33 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: கம்ப்யூட்டர் ஏஜ் மேனெஜ்மெண்ட் சர்வீசஸ் (கேம்ஸ்) பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) செப்டம்பர் 21-ஆம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலை ரூ.1,229 முதல் 1230 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

37.4 சதவீத பங்குகள் எண்ணிக்கையில் 1,82,46,600 பங்குகள் தேசிய பங்குச் சந்தை மூலம் விற்பனைக்கு வருகின்றன. 23-ஆம் தேதி வரை பங்குகளைப் பெற விண்ணப்பிக்க முடியும். பங்கு விற்பனை ரூ.2,242 கோடி வரை கிடைக்கும் என்று கேம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேம்ஸ் நிறுவனம் இந்தியாவில் பரஸ்பர நிதி மற்றும் நிதி சார்ந்த சேவைகளை இணைய வழியில் அளிக்கும் சேவையில் முன்னிலையில் உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT