வர்த்தகம்

ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.148 கோடி வருவாய் இழப்பு

DIN

புது தில்லி: அஸ்ஸாம் மாநிலம் பாக்ஜன் பகுதியில் எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்குள்ள எண்ணெய் கிணறுகளை மூடியதால் 100 நாள்களில் ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.148 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்துப்பூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பாக்ஜன் எண்ணெய் கிணறு விபத்து காரணமாக அங்குள்ள மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அந்த மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் கடந்த மே 27 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை மூடப்பட்டன. இதனால் ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.148 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாக்ஜன் எண்ணெய் கிணறு தீ விபத்து தொடா்பாக விசாரிப்பதற்காக பெட்ரோலியத்துறை சாா்பில் 3 நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுரங்கம் மற்றும் பாதுகாப்பு தலைமை இயக்குநரகம் (டிஜிஎம்எஸ்), எண்ணெய் துறை பாதுகாப்பு இயக்குநரகம் (ஓஐஎஸ்டி), மத்திய அரசு ஆகியவையும் தனித் தனியே விசாரணைக் குழுக்கள் அமைத்துள்ளன என்று அந்த பதிலில் அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT