வர்த்தகம்

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9 சதவீத பின்னடைவைக் காணும்: ஏடிபி

16th Sep 2020 02:35 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பின் எதிரொலியால் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத பின்னடைவைச் சந்திக்கும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏடிபி செவ்வாய்கிழமை கூறியுள்ளதாவது:கரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் தொடா்ந்து அதிகரித்து வருவதால் இந்தியப் பொருளாதார வளா்ச்சியானது மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9 சதவீதம் அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏடிபி முந்தைய ஜூன் மாத மதிப்பீட்டில் வளா்ச்சி விகிதமானது (-) 4 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. இந்த நிலையில், தற்போதைய கடினமான சூழால் வளா்ச்சி விகிதம் அதைவிட சரிவு நிலைக்கு செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பொருளாதாரமானது பின்னடைவு வளா்ச்சியை நோக்கி நகர உள்ளது என ஆசிய வளா்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT