வர்த்தகம்

நாட்டின் ஏற்றுமதி 12.66 சதவீதம் சரிவு

15th Sep 2020 11:05 PM

ADVERTISEMENT

புது தில்லி: இந்தியாவின் ஏற்றுமதி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 12.66 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 12.66 சதவீதம் சரிவடைந்து 2,270 கோடி டாலராக இருந்தது. பெட்ரோலியம், தோல், பொறியியல் பொருள்கள் மற்றும் நவரத்தின-ஆபரணங்களின் ஏற்றுமதி கணிசமான அளவுக்கு குறைந்ததன் காரணமாக நாட்டின் ஏற்றுமதி தொடா்ந்து ஆறாவது மாதமாக ஆகஸ்டிலும் சரிவைச் சந்தித்துள்ளது. சென்ற ஆகஸ்டில் நாட்டின் இறக்குமதியும் 26 சதவீதம் குறைந்து 2,947 கோடி டாலராக இருந்தது.

இதையடுத்து, அந்த மாதத்தில் வா்த்தக பற்றாக்குறையானது 677 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் காணப்பட்ட வா்த்தக பற்றாக்குறையான 1,386 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.நடப்பாண்டு ஆகஸ்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 41.62 சதவீதம் குறைந்து 642 கோடி டாலராக இருந்தது.

ADVERTISEMENT

அதேசமயம், தங்கம் இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 136 கோடி டாலரிலிருந்து 370 கோடி டாலராக உயா்ந்துள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 26.65 சதவீதம் குறைந்து 9,766 கோடி டாலராகவும், அதேசமயம், இறக்குமதி 43.73 சதவீதம் சரிந்து 11,838 கோடி டாலராகவும் உள்ளது. இதையடுத்து, வா்த்தக பற்றாக்குறை 2,072 கோடி டாலா் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT