வர்த்தகம்

பயணிகள் வாகன விற்பனை 7 சதவீதம் குறைவு

10th Sep 2020 02:01 AM

ADVERTISEMENT

 


புது தில்லி: பயணிகள் போக்குவரத்து வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் மாதம் 7.12 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் 1,92,189 பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,78,513 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இருசக்கர வாகன விற்பனை 28.71 சதவீதம் குறைந்து 8,98,775 வாகனங்களும், வர்த்தக வாகனங்கள் விற்பனை 57.39 சதவீதம் குறைந்து 26,536 வாகனங்களும், மூன்றுசக்கர வாகன விற்பனை 69.51 சதவீதம் குறைந்து 16,857 வாகனங்களும் விற்பனையாகின. ஒட்டுமொத்த வாகன விற்பனையும் 26.81 சதவீதமாகக் குறைந்து 11,88,087 வாகனங்கள் விற்பனையாகின' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 "எனினும் தற்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாலும் பண்டிகை காலங்கள் வருவதாலும் முந்தைய மாதங்களை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை சற்று அதிகரித்துள்ளது' என ஆட்டோமோபைல் டீலர்கள் சங்கத்தின் தலைவர் வின்கேஷ் குலாட்டி தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT