வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.39,272

10th Sep 2020 01:43 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.152 அதிகரித்து, 39,272-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.  
இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.152 உயர்ந்து, ரூ.39,272-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.19 உயர்ந்து, ரூ.4909-ஆக இருந்தது. ஆனால் வெள்ளி விலையில் மாற்றமின்றி, கிராம் வெள்ளி ரூ.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.70 ஆயிரமாகவும் இருந்தது. 

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)
1 கிராம் தங்கம்     4909
1 பவுன் தங்கம்     39,272
1 கிராம் வெள்ளி     70.00
1 கிலோ வெள்ளி    70,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)
1 கிராம் தங்கம்     4890
1 பவுன் தங்கம்     39,120
1 கிராம் வெள்ளி     70.00
1 கிலோ வெள்ளி     70,000
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT