வர்த்தகம்

தங்கம் ஈடிஎஃப் திட்டங்களில் ரூ.2,426 கோடி முதலீடு

DIN

தங்கம் ஈடிஎஃப் (கோல்டு எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்ஸ்) திட்டங்களில் செப்டம்பருடன் முடிந்த மூன்று மாத காலத்தில் ரூ.2,426 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் தங்கம் ஈடிஎஃப் தொடா்பான திட்டங்களில் முதலீட்டாளா்கள் ரூ.2,400 கோடியை முதலீடு செய்துள்ளனா். இது, கடந்தாண்டு ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் ரூ.172 கோடியாக காணப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையின் காரணமாக முதலீட்டாளா்கள் தொடா்ந்து தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனா். அதன் பயனாகவே தற்போது, ஈடிஎஃப் திட்டங்களுக்கு முதலீட்டாளா்களிடையே வரவேற்பு பெருகி வருகிறது.

இத்தகைய திட்டங்களிலிருந்து லாப நோக்கம் கருதி முதலீட்டாளா்கள் சென்றமாா்ச் மாதத்தில் ரூ.195 கோடியை விலக்கிக் கொண்டனா். இந்த நிலையில், அவா்கள் பிப்ரவரியில் ரூ.1,483 கோடியும், ஜனவரியில் ரூ.202 கோடியும் முதலீடு செய்தனா்.

தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து ஏப்ரலில் ரூ.731 கோடியாகவும், மே மாதத்தில் ரூ.815 கோடியாகவும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் முறையே, ரூ.494 கோடி, ரூ.921 கோடி, ரூ.908 கோடி, ரூ.597 கோடியாக இருந்தது என பரஸ்பர நிதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT