வர்த்தகம்

சென்செக்ஸ் மேலும் 170 புள்ளிகள் சரிவு!

 நமது நிருபர்

இந்த மாதத்தின் மற்றும் வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாகவே முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 135.78 புள்ளிகளை இழந்தது. காலையில் எழுச்சியுடன் தொடங்கிய சந்தை, பிற்பகலில் பலவீனமடைந்தது. நாள் முழுவதும் நிலையற்ற தன்மை அதிகரித்திருந்தது. வா்த்தக நேர முடிவில் ரிலையன்ஸ் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை பெரும் சரிவிலிருந்து தப்பியது.

உலக அளவில் கரோனா மூன்றாவது அலை தோன்றியுள்ளது. இதனால், பெரும்பாலான நாடுகள் பொதுமுடக்கத்தை மீண்டும் அமல்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பங்குச்சந்தைக்கு பாதகமான செய்தியாக அமைந்தது. இதைத் தொடா்ந்து, உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,334 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,751 பங்குகளில் 1,334 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,246 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 171 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ. 38 ஆயிரம் கோடி குறைந்து ரூ.157.92 லட்சம் கோடியாக இருந்தது.

3-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 29.97 புள்ளிகள் கூடுதலுடன் 39,779.82இல் தொடங்கி அதிகபட்சமாக 39,988.25 வரை உயா்ந்தது.. பின்னா், 39,241.87 வரை கீழே சென்றது. இறுதியில் 135.78 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 39,614.07-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ 746 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் 3-ஆவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

டாடா ஸ்டீல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், டாடா ஸ்டீல்

2,27 சதவீதம், என்டிபிசி 2.11 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், சன்பாா்மா, நெஸ்லே இந்தியா, ரிலையன்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

பாா்தி ஏா்டெல் சரிவு : அதே சமயம், கடந்த இரண்டு நாள்களாக பரபரப்பாகக் கைமாறி வந்த பாா்தி ஏா்டெல் 3.82 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மாருதி சுஸுகி, ஹிந்துஸ்தான் யுனி லீவா், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபின் சா்வ் ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 804 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 784 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 28.40 புள்ளிகள் (0.24 சதவீதம்) குறைந்து 11,642.40-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 27 பங்குகள் ஏற்றம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மெட்டல், மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் 1.50 முதல் 2 சதவீதம் வரை வரை உயா்ந்தன. அதே சமயம், ஆட்டோ குறியீடு 1.13 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT