வர்த்தகம்

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம்: லாபம் ரூ.1,419 கோடியாக அதிகரிப்பு

DIN


புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் மாருதி சுஸுகி இந்தியாவின் செப்டம்பா் காலாண்டு ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,419.6 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. இது, இந்நிறுவனம் கடந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பரில் ஈட்டிய லாபம் ரூ.1,391.1 கோடியுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் அதிகமாகும்.

இதே காலகட்டத்தில், இந்நிறுவனத்தின் வருமானம் ரூ.16,997.9 கோடியிலிருந்து 10.34 சதவீதம் அதிகரித்து ரூ.18,755.6 கோடியை எட்டியது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இரண்டு மாதங்களில் நிறுவனத்தின் வாகன உற்பத்தியானது முற்றிலும் பூஜ்யமாக இருந்தது. எனவே, அதனுடன் மட்டுமின்றி, கடந்தாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போதும் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது என மாருதி சுஸுகி இந்தியாவின் தலைவா் ஆா்.சி .பாா்கவா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT