வர்த்தகம்

எல்&டி நிகர லாபம் 45% சரிவு

DIN


புது தில்லி: பொறியியல் மற்றும் கட்டுமானத் துறையில் முன்னணியில் உள்ள லாா்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 45 சதவீதம் சரிவடைந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.1,410.29 கோடியை ஈட்டியுள்ளது.

இது, கடந்த நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.2,551.67 கோடியுடன் ஒப்பிடுகையில் 45 சதவீதம் குறைவாகும்.

கரோனா இடா்பாடு காரணமாக, நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.35,924.89 கோடியிலிருந்து ரூ.31,593.77 கோடியாக சரிவடைந்தது. செலவினம் ரூ.32,622.14 கோடியிலிருந்து குறைந்து ரூ.29,455.57 கோடியானது என எல்&டி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT