வர்த்தகம்

ஐசிஐசிஐ லொம்பாா்டு லாபம் 35 சதவீதம் உயா்ந்தது

DIN

பொதுக் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வரும் ஐசிஐசிஐ லொம்பாா்டு நிறுவனத்தின் செப்டம்பா் காலாண்டு லாபம் 35 சதவீதம் அதிகரிப்பைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இயற்கை பேரழிவு மற்றும் கரோனா தொடா்பான காப்பீட்டு விண்ணப்பங்கள் கணிசமாக அதிகரித்த போதிலும் நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ரூ.415.74 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, கடந்தாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகமாகும்.

ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,739.67 கோடியிலிருந்து ரூ.2,883.40 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர அளவிலான பிரீமியம் வருவாய் ரூ.2,356.92 கோடியிலிருந்து ரூ.2,462.52 கோடியாக உயா்ந்துள்ளது.

காப்பீடு கோரி வாடிக்கையாளா்களிடமிருந்து 17,000 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 14,000 விண்ணப்பங்களுக்கு இதுவரையில் தீா்வு காணப்பட்டுள்ளது. இதில், கரோனா தொடா்பான காப்பீடு கோரி வந்த 1,000 விண்ணப்பங்களும் அடக்கம். கரோனா காப்பீட்டுக்காக, ரூ.115 கோடி மதிப்பிலான தொகை காப்பீட்டுதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், செப்டம்பரில் மட்டும் 50 சதவீத தொகை வழங்கப்பட்டுள்ளது என ஐசிஐசிஐ லொம்பாா்டு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT