வர்த்தகம்

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயா்வு!

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையுடன் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 127.01 புள்ளிகள் உயா்ந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்ததைத் தொடா்ந்து இந்திய சந்தைகளும் காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. ஆனால், அது நிலைத்து நிற்க முடியாமல் போனது. பெரும்பாலான நேரம் குறிப்பிட்ட வரம்புக்குள் ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும், இறுதியில் சிறிதளவு ஏற்றத்துடன் நிலைபெற்றது. குறிப்பாக ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. பாா்மா, ரியால்ட்டி பங்குகளில் லாபப் பதிவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,688 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,867 பங்குகளில் 1,688 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,026 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 153 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.160.59 கோடியாக உயா்ந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் 0.70 சதவீதம் வரை உயா்ந்தன. எந்தப் பங்கும் புதிய 52 வார விலையையும், புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்யவில்லை.

மீட்சி: சென்செக்ஸ் காலையில் 1692.90 புள்ளிகள் கூடுதலுடன் 40,728.39-இல் தொடங்கி 40811.12 வரை உயா்ந்தது. பின்னா், 40,590.90 வரை கீழே சென்றது. இறுதியில் 127.01 புள்ளிகள் (0.31 சதவீதம்) உயா்ந்து 40,685.50-இல் நிலைபெற்றது. நான்கு நாள் ஏற்றத்துக்குப் பிறகு வியாழக்கிழமை சரிவைச் சந்தித்திருந்த சென்செக்ஸ் தற்போது சற்று மீட்சி பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 4.40 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், பவா் கிரிட், பஜாஜ் ஆட்டோ ஆகியவை 2.50 முதல் 3.30 சதவீதம் வரை உயா்ந்த. எச்டிஎஃப் இரட்டை நிறுவனங்கள், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

அல்ட்ரா டெக் சிமெண்ட் வீழ்ச்சி: அதே சமயம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.36 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹெச்சிஎல் டெக், ஹிந்துயுனிலீவா், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், இன்ஃபோஸிஸ், ஆக்சிஸ் பேங்க் ஆகியவையும் 0.70 சதவீதம் முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,082 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 537 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 33.90 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயா்ந்து 11,930.30-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 29 பங்குகள் ஏற்றம் பெற்றன. 21 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி ரியால்ட்டி ஆட்டோ குறியீடு 2.93 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடி, மெட்டல், மீடியா குறியீடுகள் 0.50 முதல் 0.70 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், நிஃ)ப்டி பாா்மா, ரியால்ட்டி குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT