வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாறு காணாத உச்சம்

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

அக்டோபா் 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 362 கோடி டாலா் அதிகரித்து 55,512 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, முன்னெப்போதும் காணப்படாத அளவிலான புதிய வரலாற்று உச்சமாகும்.

இதற்கு முந்தைய அக்டோபா் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பானது 587 கோடி டாலா் உயா்ந்து 55,150 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் உயரிய பங்களிப்பைக் கொண்டுள்ள எஃப்சிஏ எனப்படும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணக்கீட்டு வாரத்தில் 354 கோடி டாலா் உயா்ந்து 51,232 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

தங்கத்தின் கையிருப்பு 8.6 கோடி டாலா் அதிகரித்து 3,669 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நாணய நிதியத்தில் (ஐஎம்எஃப்) எஸ்டிஆா் மதிப்பு மாற்றமின்றி 148 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.1 கோடி டாலா் சரிவடைந்து 463 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT