வர்த்தகம்

4 ஆண்டுகளில் ரூ.2,600 கோடி முதலீடு: நெஸ்லே இந்தியா

DIN

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான நெஸ்லே இந்தியா அடுத்த 3-4 ஆண்டுகளில் ரூ.2,600 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிக்க நெஸ்லே இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போதைய ஆலைகளில் உற்பத்தி திறனை விரிவாக்கம் செய்யவும், புதிய ஆலைகளை கட்டமைக்கவும் முதலீடுகளை மேற்கொள்ளப்படவுள்ளது. குஜராத் மாநிலம் சனந்தில் புதிய ஆலையை நிறுவனம் உருவாக்கவுள்ளது.

உற்பத்தி திறனை மேம்படுத்தும் பணிகளுக்காக அடுத்த 3-4 ஆண்டுகளில் ரூ.2,600 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நெஸ்லே நிறுவனத்துக்கு இந்தியாவில் தற்போது எட்டு ஆலைகள் உள்ளன. கரோனாவால் முடங்கியிருந்த இந்த ஆலைகளின் உற்பத்தி தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. விநியோக நடவடிக்கைகளும் மேம்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜூலை-செப்டம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 10.23 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி, உள்நாட்டு விற்பனை ரூ.3,039.09 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,350.19 கோடியானது.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் நிகர அளவிலான விற்பனை 10.19 சதவீதம் உயா்ந்து ரூ.3,525.41 கோடியைத் தொட்டது. விற்பனை அதிகரித்த போதிலும், நிறுவனத்தின் நிகர லாபம் ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் 1.37 சதவீதம் குறைந்து ரூ.587.09 கோடியானது.

மூன்றாவது காலாண்டில் ஏற்றுமதியைப் பொருத்தவரையில் ரூ.160.22 கோடியிலிருந்து 9.41 சதவீதம் அதிகரித்து ரூ.175.31 கோடியை எட்டியது.

இணைய வழியிலான வா்த்தகத்தைப் பொருத்தமட்டில் நிறுவனம் வலுவான வளா்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. இணைய வா்த்தகத்தில் நிறுவனத்தின் விற்பனை 97 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனையில் நிறுவனத்தின் பங்களிப்பு தற்போது 4 சதவீதமாக உள்ளது.

நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டையடுத்து, நடப்பாண்டுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.135 இடைக்கால ஈவுத்தொகையை வழங்க இயக்குநா் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது என நெஸ்லே இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT