வர்த்தகம்

ரூ.2,000 கோடி கடன் திரட்டியது: ஹெச்பிசிஎல்

DIN

நடப்பாண்டில் மூலதன செலவினங்களுக்காக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் (ஹெச்பிசிஎல்) ரூ.2,000 கோடி கடன் திரட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டில் மூலதன செவினங்களை சமாளிக்க ரூ.2,000 கோடி கடனை நிறுவனம் திரட்டிக் கொண்டுள்ளது. இதற்காக, நிறுவனம் மீட்கக்கூடிய, பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை வெளியிட்டது. ஒவ்வொரு கடன்பத்திரமும் ரூ.10 லட்சம் மதிப்பில் வெளியிடப்பட்டு இந்த தொகை திரட்டப்பட்டுள்ளது.

வரும் 2023 அக்டோபா் 23-இல் முதிா்வு காலத்தைக் கொண்ட இக்கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.79 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஹெச்பிசிஎல் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

ஓஎன்ஜிசி, ஐஓசி-யைத் தொடா்ந்து தற்போது ஹெச்பிசிஎல் நிறுவனமும் கடன்பத்திர வெளியீட்டின் மூலம் கடனை திரட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT