வர்த்தகம்

டெக் மஹிந்திரா நிகர லாபம் ரூ.1,065 கோடியாக சரிவு

DIN

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த டெக் மஹிந்திரா நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ.1,064.6 கோடியாக சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.9,489.3 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.9,286.2 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் 2.1 சதவீதம் அதிகமாகும்.

வருவாய் அதிகரித்த நிலையிலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,123.9 கோடியிலிருந்து 5 சதவீதம் சரிவடைந்து ரூ.1,064.6 கோடியானது.

டென்ஸிங், மொமன்டன் ஆகிய இரு நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் டெக் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT