வர்த்தகம்

உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்; சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு

21st Oct 2020 10:48 AM

ADVERTISEMENT

பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 402.43 புள்ளிகள் உயர்ந்து  40,946.80 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 1.5 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 11,974 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.68 சதவிகிதம் உயர்வாகும்.

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக டாடா ஸ்டீல் 3.34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் வங்கித்துறைகள் அதிக அளவில் ஏற்றம் கண்டுள்ளன. மேலும் இன்போசிஸ் 1.17 சதவிகிதமும், டைடன் 1.05 சதவிகிதமும், கோட்டாக் 1.04 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இந்துஸ்தான் யூனிலிவர் சரிவை சந்தித்துள்ளது. 

ADVERTISEMENT

Tags : Sensex
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT