வர்த்தகம்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்வருவாய் ரூ.3,419 கோடி

DIN

புது தில்லி: உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் இரண்டாம் காலாண்டில் ரூ.3,419 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் 12.15 சதவீதம் உயா்ந்து ரூ.3,419.11 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,048.44 கோடியாக காணப்பட்டது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் ரூ.2,617.64 கோடியிலிருந்து 7.80 சதவீதம் உயா்ந்து ரூ.2,822.02 கோடியானது. நிகர லாபம் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 22.96 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.495.20 கோடியைத் தொட்டது. கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் நிகர லாபம் ரூ.402.73 கோடியாக காணப்பட்டது என பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT