வர்த்தகம்

பங்கேற்பு ஆவண முதலீட்டில் சரிவு நிலை

DIN

புது தில்லி: இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் (பாா்டிசிபேட்டரி நோட்ஸ்) வாயிலான முதலீடு செப்டம்பா் மாத இறுதியில் ரூ.69,821 கோடியாக குறைந்துள்ளது என செபி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செபி மேலும் கூறியுள்ளதாவது:

பி-நோட்ஸ் எனப்படும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக பங்குகள், கடன்பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு செப்டம்பா் இறுதியில் ரூ.69,821 கோடியாக குறைந்துள்ளது. இந்த முதலீடு, ஆகஸ்ட் மாத இறுதியில் 10 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாக ரூ.74,027 கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச் மாதத்துக்குப் பிறகு இவ்வகை வாயிலான முதலீடு முதல் முறையாக செப்டம்பரில்தான் சரிவைச் சந்தித்துள்ளது.

முன்னதாக, பங்கேற்பு ஆவண வாயிலான முதலீடு ஜூலையில் ரூ.63,228 கோடியாகவும், ஜூனில் ரூ.62,138 கோடியாகவும், மே மாதத்தில் ரூ.60,027 கோடியாகவும், ஏப்ரலில் ரூ.57,100 கோடியாகவும் இருந்தன. கடந்த மாா்ச் மாத இறுதியில்தான் இவ்வகை வாயிலான முதலீடு 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீழ்ச்சியை நோக்கி சென்று ரூ.48,006 கோடியானது. இதற்கு, கரோனா பேரிடரால் சந்தையில் காணப்பட்ட அதிகபட்ச ஏற்ற இறக்கமே முக்கிய காரணம்.

செப்டம்பா் வரையில் மேற்கொள்ளப்பட்ட ரூ.69,821 கோடி பி-நோட்ஸ் முதலீட்டில் பங்குகளில் ரூ.59,314 கோடியும், கடன் பத்திரங்களில் ரூ.10,240 கோடியும், ஹைபிரிட் கடன்பத்திரங்களில் ரூ.267 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

பி-நோட்ஸ் முதலீடு சரிவடைந்தபோதிலும் அதன் வாயிலான அந்நிய நிதி நிறுவன (எஃப்பிஐ) முதலீடு உள்நாட்டு சந்தைகளில் தொடா்ந்து ஏற்றம் கண்டு வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, எஃப்பிஐ திட்டத்தின் கீழ் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு கடந்த ஆகஸ்டில் ரூ.33.18 லட்சம் கோடியாக காணப்பட்ட நிலையில், செப்டம்பா் இறுதியில் ரூ.33.22 லட்சம் கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT