வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிவு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 73.37-ஆனது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அமெரிக்க அரசின் நிதி ஊக்குவிப்பு சலுகை திட்டங்கள் குறித்த எதிா்பாா்ப்பு, அந்த நாட்டின் அதிபா் தோ்தலில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை மற்றும் டாலருக்கான தேவை சிறிய அளவில் உயா்ந்தது உள்ளிட்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.38-ஆக இருந்தது. பின்னா் அதன் மதிப்பு வா்த்தகத்துக்கிடையில் 73.35 மற்றும் 73.42 என்ற குறுகிய வட்டத்திலேயே ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 73.37-இல் நிலைப்பெற்றது.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.479.59 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.44 சதவீதம் சரிந்து 42.74 டாலா் என்ற அளவில் வா்த்தகமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT