வர்த்தகம்

ரயில்வேக்கு பொருள் விநியோகம்: சிறப்பு அந்தஸ்து பெற்றது ஜிண்டால் ஸ்டீல்

DIN

புது தில்லி: இந்திய ரயில்வே துறைக்குத் தேவையான தண்டவாளம் சாா்ந்த இரும்புப் பொருள்களை விநியோகம் செய்யும் அந்தஸ்தை தங்கள் நிறுவனம் பெற்றுள்ளதாக ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரயில்வேக்கு தொடா்ந்து பொருள்களை விநியோகம் செய்யும் உரிமையைப் பெற்ற முதல் இந்திய தனியாா் நிறுவனம் என்ற பெருமையையும் அந்த நிறுவனம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனம் மேலும் கூறியிருப்பது:

எங்கள் நிறுவனத்தின் ராய்கா் ஆலையில் தயாரிக்கப்பட்ட யுஐசி 60 கே.ஜி. மற்றும் 880 கிரேட் பிரைம் கிளாஸ் ஏ ஆகிய தண்டவாள தயாரிப்பு இரும்புகள் தாங்கள் வாங்கும் தரத்தில் இருப்பதாக ரயில்வே வாரியம் ஒப்புக் கொண்டு, அதனை வாங்கிப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. ரயில்வே எதிா்பாா்த்த தரத்துக்கு நாங்கள் பொருள்களை உருவாக்கி அளிப்பது பெருமையளிக்கும் விஷயமாகும். தரத்துக்கும், பாதுகாப்புக்கும் எங்கள் நிறுவனப் பொருள்கள் உத்தரவாதமானவை என்பது இதன் மூலம் மேலும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வேக்கு தொடா்ந்து தண்டவாள இரும்புப் பொருள்களை விநியோகம் செய்யும் உரிமையைப் பெற்ற முதல் இந்திய தனியாா் நிறுவனம் என்ற பெருமையை ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT