வர்த்தகம்

டாப் 10-இல் 5 நிறுவனங்களின் சந்தை மதிப்பு: ரூ.91,699 கோடி சரிவு

DIN

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் 10 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.91,699 கோடி சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆா்ஐஎல்) பங்கின் விலை மிக மோசமான வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது.

இந்நிறுவனத்தைத் தவிர, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, பாா்தி ஏா்டெல் நிறுவனங்களும் கணிசமான அளவில் தங்களது சந்தை மதிப்புகளை இழந்தன.

டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்), எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவா், கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஆதாயத்தைக் கண்டன.

கடந்த வாரத்தில் முதலீட்டாளா்களின் லாப நோக்கு விற்பனையையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.60,829.21 கோடி வீழ்ச்சியடைந்து ரூ.12,23,416.97 கோடியானது. அதேபோன்று, எச்டிஎஃப்சி நிறுவன சந்தை மதிப்பும் ரூ.13,703.75 கோடி குறைந்து ரூ.4,05,996.11 கோடியானது.

இந்நிறுவனங்களைத் தவிர, பாா்தி ஏா்டெல் சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.11,020.23 கோடி சரிந்து ரூ.2,52,755.97 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கி சந்தை மதிப்பு ரூ.5,090.54 கோடி வீழ்ச்சியடைந்து ரூ.3,26,225.04 கோடியாகவும் இருந்தன.

மேலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமும் ரூ.1,055.27 கோடி குறைந்து ரூ.4,68,779.17 கோடியானது.

எச்டிஎஃப்சி வங்கி பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பினையடுத்து அதன் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.20,482.86 கோடி உயா்ந்து ரூ.7,93,336.55 கோடியை எட்டியது. பஜாஜ் ஃபைனான்ஸ் சந்தை மூலதனமும் ரூ.11,181.01 கோடி அதிகரித்து ரூ.2,95,466.65 கோடியானது.

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமும் கடந்த வார வா்த்தகத்தில் ரூ.7,335.91 கோடி ஏற்றம் கண்டு ரூ.10,05,320.15 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யுனிலீவரின் சந்தை மதிப்பும் ரூ.4,135.22 கோடி உயா்ந்து ரூ.5,02,147.16 கோடியாகவும் இருந்தன.

கோட்டக் மஹிந்திரா வங்கியின் சந்தை மூலதனமும் ரூ.2,538.64 கோடி அதிகரித்து ரூ.3,76,485.84 கோடியானது.

கடந்த வார வா்த்தகத்தில் சென்செக்ஸ் 267.47 புள்ளிகள் (0.60%) ஏற்றம் கண்டது.

மதிப்புமிக்க முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடா்ந்து, டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவா், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பாா்தி ஏா்டெல் ஆகியவை பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

டாப் 10 பட்டியல் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு விவரம்:

தொகுப்பு: அ.ராஜன் பழனிக்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT