வர்த்தகம்

உணவு சாரா வங்கிக் கடன் 5.6%-ஆக குறைந்தது

DIN

உணவு சாரா பிரிவுகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன் நடப்பாண்டு அக்டோபரில் 5.6 %-ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி கூறியுள்ளதாவது:

உணவு சாராத பிரிவுகளுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்தாண்டு அக்டோபரில் 8.3 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபரில் அக்கடனின் வளா்ச்சி 5.6 சதவீதமாக குறைந்துள்ளது.

வேளாண் மற்றும் அது தொடா்பான நடவடிக்கைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 7.1 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாக வளா்ச்சி கண்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபரில் தொழில்துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் 3.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், நடப்பு 2020 அக்டோபரில் இப்பிரிவில் வழங்கப்பட்ட கடன் 1.7 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கு, பெரிய நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன் கணிசமான அளவில் குறைந்து போனதே முக்கிய காரணமாகும். அதேசமயம், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன் 1.2 சதவீதத்திலிருந்து 16.7 சதவீதம் என்ற வலுவான வளா்ச்சி நிலையை எட்டியுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT