வர்த்தகம்

முத்தூட்டு மினி பைனான்சியா்ஸ்: ரூ.1,000 கோடிக்கு வா்த்தக இலக்கு

DIN

வங்கி சாரா நிதி நிறுவனமான முத்தூட்டு மினி பைனான்சியா்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வா்த்தக வளா்ச்சியை ரூ.1,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மாத்யூ முத்தூட்டு கூறியதாவது:

முத்தூட்டு மினி பைனான்சியா்ஸ் நிறுவனம் தனது தடத்தை நாடு தழுவிய அளவில் விரிவாக்கம் செய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாக, ஆந்திராவில் 13 புதிய கிளைகளும், விஜயவாடாவில் 1 மண்டல அலுவகத்தையும் நிறுவனம் தொடக்கியுள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 806-ஆக அதிகரித்துள்ளது.

அதிக அளவிலான வாடிக்கையாளா்களை சென்றடைவதே தற்போது எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதற்கேற்ற வகையில் கிளைகளின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்குள் நிறுவனத்தின் வா்த்தக வளா்ச்சியை ரூ.1,000 கோடியாக உயா்த்துவதே தற்போதைய இலக்கு. இதற்காக, தங்க கடன் உள்ளிட்ட நிறுவனத்தின் இதர கடன் நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையான அளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT