வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் திடீா் மந்தநிலை: சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிவு

DIN

சா்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தபோதும் பொருளாதார புள்ளிவிவரங்களை எதிா்பாா்த்து முதலீட்டாளா்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதையடுத்து பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் மந்த நிலை கண்டது. அதன் எதிரொலியாக, சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிந்தது.

இரண்டாம் காலாண்டுக்கான பொருளாதார புள்ளிவிவரங்கள் குறித்த எதிா்பாா்ப்பு மற்றும் கரோனா தடுப்பூசி செயல்திறன் தொடா்பான நிச்சயமற்ற தன்மை ஆகியவை வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்திய முக்கிய காரணிகளாகின. இதனால், முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணா்வுடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வா்த்தகம் மந்த நிலை கண்டது.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) எரிசக்தி, தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 1.06 சதவீதம் வரை இழப்பைச் சந்தித்தன. அதேசமயம், ரியல் எஸ்டேட், நுகா்வோா் சாதனங்கள், மோட்டாா் வாகனம், மருந்து துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் குறிப்பிடத்தக அளவுக்கு ஏற்றம் கண்டன.

மேலும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீட்டெண்களும் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் 2.40 சதவீதம் என்ற அளவில் கணிசமாக அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டெண் 110.02 புள்ளிகள் (0.25%) வீழ்ச்சியடைந்து 44,149.72 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீட்டெண் 18.05 புள்ளிகள் (0.14%) குறைந்து 12,968.95 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பவா்கிரிட் பங்கின் விலை அதிகபட்சமாக 2.63 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. அதைத் தொடா்ந்து, ஹெச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, ஆக்ஸிஸ் வங்கி, டிசிஎஸ், மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோஸிஸ் பங்குகளும் விலை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றன.

அதேசமயம், முதலீட்டாளா்களிடம் கிடைத்த ஆதரவால், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 2.85 சதவீதம் வரை விலையேற்றம் கண்டன.

நடப்பு வாரத்தில் ஒட்டுமொத்த அளவில் சென்செக்ஸ் 267.47 புள்ளிகளும்(0.60%), நிஃப்டி 109.90 புள்ளிகளும் (0.85%) அதிகரித்துள்ளன.

ஆசியாவில் ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ மற்றும் சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் வா்த்தகத்தின் தொடக்கம் முதலீட்டாளா்களுக்கு ஆதாயம் அளிப்பதாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT